logo
home வழிபாட்டுத் தலங்கள் ஜனவரி 15, 2019
6 கண், 2 கை, 2 கால்களுடன், மும்மூர்த்தியாக காட்சிதரும் குச்சனூர் சனீஸ்வரன்
article image

நிறம்

செண்பகநல்லூர் என்ற பகுதியைச் சேர்ந்த அரசன் தினகரன் குழந்தைப்பேறின்மையால் அவதிப்பட்டான். குழந்தைக்காக இறைவனிடம் வேண்டிவந்தான். கோயிலில் அவனுக்கு அசரீரி ஒன்று கேட்டது. அந்த அசரீரியில் அவனது வீட்டிற்குப் பிரா மணச் சிறுவன் ஒருவன் வருவான் என்றும், அவனை வளர்த்து வர வேண்டும் என்றும், அதன் பிறகு அரசனுக்கு ஒரு குழந்தை பிறக் கும் என்றும் கூறப்பட்டது. அசரீரியில் சொன்னபடி சில நாட்களில் பிராமணச் சிறுவன் ஒருவன் அவனிடம் வந்து சேர்ந்தான். அந்த மன்னனும் அந்தச் சிறு வனுக்குச் சந்திரவதனன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தான். அதன் பின்பு, அசரீரியில் சொல்லியபடியே அரசிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அரச னும், அரசியும் அந்தக் குழந்தைக்குச் சதாகன் என்ற பெயர் சூட்டி வளர்த்தனர். இரண்டு குழந்தைகளும் வளர்ந்து பெரியவர் களாயினர். சந்திரவதனன் மிகவும் அறிவுத் திறனுடன் இருந்தான். சதாகன் அப்படி இருக்க வில்லை. இதனால், அரசன் சந்திரவதனன் வளர்ப்பு மகனாக இருந்தாலும் அவனையே அரச னாக்குவது என்று முடிவு செய்து அவனுக்கே முடிசூட்டினான். அரசனுக்கு சனி: இந்நிலையில் அரசன் தினகரனுக்கு சனி தோஷம் பிடித்தது. இதனால் தினகரன் பெரும் துன்பத்திற்கு ஆளானான். தந்தையின் துன்பத்தைக் கண்டு மனமுடைந்த சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்குச் சென்று சனிபகவானை வழிபடத்துவங்கினான். அவனுக்கு காட்சியளித்த சனீஸ்வரன் அவனது கோரிக்கை என்னவென்று கேட் டார். தினகர மன்னருக்குப் பதிலாக தன் னைப் பற்றிக்கொள்ள சந்திரவதனன் வேண்டி னான். அதற்கு மறுத்துவிட்ட சனீவரன் கிரஹதோஷகாலகட்டத்தை மட்டும் ஏழரை வருடத்திலிருந்து ஏழரை மாதமாகக் குறைத்து விட்டு மறைந்தார். அரண்மனைக்கு திரும்பிய சந்திரவதனன் இரும்பினால் ஒரு லிங்கம் செய்து திரும்பவும் அதே செண்பக வனத்திற்கு வந்தடைந்தான். இரும்பு லிங்கத்தை தியானம் செய்த இடத்தில் பிரதிஷ்டை செய்தான். பூசைப் பொருள்களாக பூசணி, கரும்புத் துண்டுகள், கீரைகள் மற்றும் எள் ஆகியவற்றை படையலிட்டான். தியானம் மேற்கொண்டான். அவனது தியானத்திற்கு மனமிறங்கிய சனீஸ்வரன் அவன் முன்பு காட்சி தந்து என்ன வேண்டும் என்று கேட்டார். “முதுமையில் கஷ்டம் வந்தால் யாராலும் தாங்க முடியாது. எனது தகப்பனாரான தினகர மன்னருக்குப் பதிலாக என்னைப் பற் றிக் கொள்ள வேண்டும்”, என்று மீண்டும் மன்றாடினான். அவனது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட சனிபகவான், ஏழரை மாத கிரஹதோஷத்தை ஏழரை நாழிகையாகக் குறைத்துவிட்டு மறைந்தார். இதே காலநேரத்தில்... மணி நகரத்தில் இளவரசனான சதாகன் தனது அண்ணன் சந்திர வதனன் பிரிவைத் தாங்காமல் அரண்மனையை விட்டு வெளியேறினான். அண்ணனைத் தேடி அதே வனப்பகுதிக்குச் சென்றவன் களைப்பில் ஒரு மரத்தடியில் படுத்து தூங்கிவிட்டான். பிள் ளைகளை காணாமல் மனம் பதறிய தினகரன் மன்னன் பிள்ளைகளைத் தேடுவதற்கு வீரர்களை அனுப்பி வைத்தார். சந்திரவதனன் தியானம் செய்த இடத்திற்கு வந்த வீரர்கள் உறைந்து போயினர். இளவரசன் சதாகனின் தலை, கை, கால், ஆகியவற்றை துண்டித்து இரும்பு லிங்கத்திற்கு முன்பு படைய லிட்டு குடலை கழுத்தில் மாலையாக அணிந்து சந்திரவதனன் தியானத்திலிருப்பதைக் கண்ட னர். பதறிய வீரர்கள், இச்செய்தியை மன்னனிடம் கூறினர். தினகர மன்னன் செண்பக வனத்திற்கு விரைந்தான் தன் அருமை மகனுக்கு ஏற்பட்ட நிலை கண்டு நெஞ்சம் பதறினான் சந்திரவதனன் கழுத்தை வெட்ட வீரர்களுக்கு உத்தரவிட்டார். வீரர்கள் கூறிய வாளுடன் சந்திரவதனனை கொல்ல முற்படும்போது, சனிபகவான் அவர்க ளைத் தடுத்து நிறுத்தினார். அதே வனப்பகுதியில் அயர்ந்து தூங்கிய இயவரசன் சதாகன் திடுக்கிடெழுந்து சம்பவ இடத்திற்குச் சென்றான். உயிருடன் சாதகனைப் பார்த்த மன்னன் திகைப்பில் ஆழ்ந்தான். உடல்பாகம் துண்டு துண்டாக்கப்பட்டு கிடந்த வன் எவ்வாறு உயிருடன் காட்சியளிக்கிறான் என்று குழம்பினான்.... இதைக் கண்ட சனீஸ்வரன் கிரஹதோஷத் தினால் பூசைப் பொருட்களான பூசணி இளவரசன் சதாகனின் தலையாகவும், கரும்புத் துண்டுகள் கை, கால்களாகவும், எள் கீரை குடலாகவும் தோற்றமளித்ததை தெரியப்படுத்தினார். உண்மையை அறிந்த தினகர மன்னன் தான் செய்த தவறை உணர்ந்து, தனது உடையவாளால் தன் தலையை வெட்டமுற்பட சனீஸ்வரன் தடுத்தாட்கொண்டார். சனீஸ்வர பகவானே சந்திரவதனனை குலிங்க நாட்டு மன்னராக முடிசூட்டினார். சந்திரவதனம் தியானம் செய்த இடத்தில் குச்சுப்புற்களால் கோவில் கட்ட உத்தரவிட்டு மறைந்தார். அதே நேரம் சந்திரவதனன் தியானம் செய்த செண்பக வனத்தில் சந்திரவதனனால் பிரதிஷ்டை செய்து வழிபட்ட இரும்புலிங்கம் இருந்த இடத்தில் பூமியை பிளந்து கொண்டு ஒரு கல்தூண் எழுந்து நின்றது. சுயம்புவாக சனீஸ்வரன் பூமியிலிருந்து எழுந்திருப்பதை உணர்ந்தான் சந்திரவதனன். சனீஸ்வரன் ஆணைப்படி குச்சுப்புற்களால் கோயில் கட்டினான்; குச்சுப் போன்ற கோயி லுக்கு கீழே சனீஸ்வரன் சுயம்புவாக காட்சி தந்ததால், “குச்சன்”என்றும் அந்த இடம் “குச்சனூர்” என்றும் வழங்கப்பட்டு வருகிறது. கால வரம்பிற்கு அப்பாற்பட்ட குச்சனூர் சனீஸ்வரனைப் பற்றி கஸ்திய கௌசிக, சிவநாடி ஜோதிடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. சுயம்பு மூலவர் நெற்றியில் நாமம் இடப்பட்டிருப்பது சூரிய நாராயண புத்திரன் (ரகு வம்சம்) என்பதை உணர்த்துவதற்கே. ஈஸ்வரபட்டம் பெற்றிருப்பதால் கிரீடத்தில் விபூதிபட்டம் அணியப்பட்டுள்ளது. எனவே இங்கே வைணவரும் சைவரும் வந்து வழிபடு கின்றனர். குச்சனூர் - சனீஸ்வர பகவான் தமிழகப் பெருங்கோவில்களில் சனீஸ்வர பகவானை உபசந்நிதியிலேயே காண முடியும். ஆனால், குச்சனூரில் அப்படியல்ல! சனீஸ்வர பகவான் தலை நாயகனாக மும் மூர்த்தியாக மற்ற தெய்வங்களோடு இணை இல்லாமல் தனிப்பெருந்தெய்வமாக நின்று விளங்குகிறார். சனீஸ்வர பகவானே இங்கு மூலவர். ‘குச்சனூரான்’ என்ற திருப்பெயரும் பேச்சு வழக்கில் இங்கே வழங்கி வருகின்றது. தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுரபி நதி எனப் புராணங்களில் போற்றப்படும் பெருமையுடைய சுருளி ஆற்றின் கிளையாக இருக்கும் முதன்மை வாய்க்காலின் மேற்குக் கரையில் குச்சனூர் எனுமிடத்தில் சனீவர பகவான் கோவில் அமைந்திருக்கிறது. தலவிருட்சமும் - மூலஸ்தானமும்: மூலஸ்தானத்தில் உள்ள மூலவர் சுயம்புவாகத் தோன்றியவர். கருநிறமுடன் லிங்கவடிவில் தோற்றம். உடன் உற்சவ மூர்த்தியும் உள்ளார். ஆண்டுக்கு ஒருமுறை உற்சவர் பவனி வருவார். முப்பெரும் தெய்வங்களான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் இந்த சுயம்பு சனீஸ்வர பகவானுக்குள் சேர்ந்து இருப்பதால் (ஐக்கியமாகி இருப்பதால்) மூலவருக்கு ஆறு கண்கள் இருக் கின்றன. அரூபி வடிவமான லிங்கம் சுயம்புவாக வளர்ந்து கொண்டேயிருப்பதால் மஞ்சனக் காப்புக் கட்டிய நிலையில் அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. திருக்கோவிலின் வளாகத்தில் வினாயகப் பெருமான், முருகன் சந்நிதிகள் உள்ளன. உட்புறமாக லாடசந்நியாசியின் கோயில் உள்ளது. வாய்க்கால் கரையில் சோணை கருப்பனசாமி கோவில் உள்ளது. அதற்குப் பக்கத்தில் கன்னிமார் கோவிலும், நாகர் கோவிலும் உள்ளன. மூலஸ்தானத்திற்கு பின்புறம் விடத்தலை மரம் உள்ளது. விடத்தலை மரம் ஸ்தலவிருட்சமாகும். காகத்திற்கு முதல்மரியாதை: நாள்தோறும் முக்கால பூஜைகளும் தவறாமல் நடைபெறுகிறது. பூஜை முடிந்தபின் தளிகை காகத்திற்கு வைக்கப்படும். காகம் எடுக்காவிட்டால் அன்றைய தினம் தடையாகக் கருதி மீண்டும் பூசாரிகள் மன்னிப்புக் கேட்டு மீண்டும் காகத்திற்கு தளிகையை வைப்பர். தளிகையை காகம் உண்டபின்தான் பக்தர்களுக்கு பரிமாறப்படும். இது மிகவும் சிறப்பானது. தவிர, சனி பகவானுக்கு உகந்தது என எள் பொங்கலும் வைக்கப்படும். சனிப்பெயர்ச்சியும் - ஆடித்திருவிழாவும் சனிப் பெயர்ச்சி தினம் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. ஆடிமாதம் சனிக்கிழமை தோறும் உற்சவகாலம் சிறப்பாகக் கொண்டாடப்படும். மூன்றாம் சனிக் கிழமை மிகவும் பிரசித்தமாகும். குச்சனூர் சனீஸ்வரன் தரும் பலன்கள்: தீராத வயிற்றுநோய் நீங்கும் திருமணத்தடை விலகும் சந்தான பாக்கியம் உண்டாகும் நோடித்துப்போன வியாபாரம் இலாபத்திலே இயங்கும் விளைச்சல் குன்றிய விளை நிலங்கள் அமோக மகசூல் பெறும் நீர்வளம் குன்றிய கிணறுகளில் நீர் வளம் பெருகும் நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் விபூதி குங்குமத்தை தினமும் அணிந்தால் உடலும் உள்ளமும் வலுவடையும். இத்தலத்தை தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் 045-54-321108